‘KINETOSCOPE’ ‘க்னைடோஸ்கோப்’ சார்பாக DR.S.செல்வமுத்து & N.மஞ்சுநாத் இணைந்து தயாரிக்க, P.பழனி & B.முருகேசன் இணை தயாரிப்பில், R.P.ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தற்காப்பு’.
இயக்குனர் பி .வாசுவின் மகன் சக்திவேல் வாசு இதில் கதாநாயகனாக நடிகின்றார். சக்தி தனது பெயரை இப்போது ‘சக்திவேல் வாசு’ என்று மாற்றிக் கொண்டுள்ளார். . மற்றொரு நாயகனாக இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றார். கூடவே ரியாஸ்கானும் நடிக்கிறார்.
F.S. பைசல் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செய்கிறார் ஜோன்ஸ். ஆனந்த். ஷான் லோகேஷ் எடிட்டிங்கையும், கலையை M.G.முருகன்-ம் கவனிக்கின்றனர்.
படம் பற்றி பேசிய இயக்குநர் ரவி, “மிகவும் புதுமையான கதைக் களம் இது. மனித உயிர்களின் மேன்மையை சொல்லும் அம்சம் கொண்ட கதை இது. காரணம் எதுவானாலும் உயிர்ப்பலி தீர்வாகாது என்ற உயரிய நோக்கத்தை வலியுறுத்துகிறது ‘தற்காப்பு’.
தவறுதலாக நடைபெறும் ஒரு கொலையால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக சொல்லும் திரைக்கதையால் உருவாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்காப்பு என்பது தன்னை மட்டும் காத்துக் கொள்வதைப் பற்றி பேசாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே பேசும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட கர்நாடக எல்லைப் பகுதிகள், மற்றும் பெங்களூருவிலும் நடைபெற்றுள்ளது.
இப்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் வெள்ளித் திரையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்..” என்றார்.









