‘கலையாத நினைவுகள்’, சத்யராஜ் நடித்த ‘அடாவடி’ போன்ற படங்களை தயாரித்த ஶ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தற்போது தயாரித்திருக்கும் படம் ‘தண்ணி வண்டி’.
இந்தப் படத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘வில் அம்பு’ படத்தின் நாயகியான சம்ஷகிருதி நடித்துள்ளார்.
மற்றும் தம்பி ராமையா, பால சரவணன், விதுலேக்கா, தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுரை முத்து, முல்லை கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், சேரன்ராஜ், மனோஜ்குமார், பாவா லட்சுமணன், காதல் சுகுமார், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வினுதா லாலும் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – எஸ்.என். வெங்கட், இசை – மோசஸ், பாடல்கள் – மோகன் ராஜன், கவிஞர் சாரதி, கதிர்மொழி, Ve.மதன்குமார், படத் தொகுப்பு – A.L.ரமேஷ், கலை இயக்கம் – கே.வீரசமர், சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், நடன இயக்கம் – தினேஷ், தீனா, தயாரிப்பு மேற்பார்வை – பழனிச்சாமி, மக்கள் தொடர்பு – மௌனம் ரவி – மணவை புவன், தயாரிப்பு – ஶ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ், தயாரிப்பாளர் – G.சரவணா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக்க வித்யா.
தண்ணி வண்டி படம் பற்றி இயக்குநர் மாணிக்க வித்யா பேசும்போது, “மனிதன் அவன் நினைப்பதை காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன். ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங் கெட்டவன்” என்ற ‘சிக்மண்ட் ப்ராய்ட்’-ன் வாசகம்தான் இந்தத் ‘தண்ணி வண்டி’ படத்தின் கதைக் கரு.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பார்கள். அப்படி பண போதைக்கு, குடி போதைக்கு, செக்ஸ் போதைக்கு என பலவிதமான போதைக்கு அடிமையான 8 கதாபாத்திரங்களின் வாழ்க்கைதான் இந்த படத்தின் திரைக்கதை.
மதுரையில் தண்ணி வண்டி வைத்து பிழைப்பு நடத்தும் உமாபதி ராமையா, பால சரவணன், நாயாகி சம்ஸ்கிருதி மூவரும் ஒரு முக்கிய புள்ளியின் கொலை வழக்கில் மாட்டிக் கொள்கிறார்கள்.
முக்கிய புள்ளியின் ஆட்கள் ஒருபுறம் தேட, காவல்துறை ஒருபுறம் தேட, இறுதியில் தப்பித்தார்களா தங்களை குற்றமற்றவர்கள் என எப்படி நிரூபித்தார்கள் என்பதை காமெடியாகவும், ஜனரஞ்சமாகவும், க்ரைமாகவும் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய முக்கியமான படமாக இது இருக்கும். படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி தமிழகமெங்கும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது…” என்றார்.