உமாபதி ராமையா நாயகனாக நடிக்கும் ‘தண்ணி வண்டி’ திரைப்படம்..!

உமாபதி ராமையா நாயகனாக நடிக்கும் ‘தண்ணி வண்டி’ திரைப்படம்..!

தயாரிப்பாளர் ஜி.சரவணன் அவர்களின் ஸ்ரீசரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 3-வது திரைப்படம் ‘தண்ணி வண்டி.’

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நாயகனாகவும் சம்ஸ்கிருதி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பால சரவணன், வித்யுலேகா, சேரன்ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, 'விஜய் டிவி' புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, 'சன் டிவி' புகழ் மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.

வெங்கட் (ஒளிப்பதிவு), வீர சமர் (கலை), ஏ.எல்.ரமேஷ் (படத் தொகுப்பு), மோசஸ் (இசை), ஏ.வி.பழனிசாமி (தயாரிப்பு நிர்வாகம்), மோகன்ராஜ் - கவிஞர் சாரதி - கதிர் மொழி (பாடல்கள்), சுப்ரீம் சுந்தர் (சண்டைப் பயிற்சி), தினேஷ் - தீனா (நடனம்), புச்சி (ஆடைகள்), மூவேந்தர் (மேக்கப்), மூர்த்தி (ஸ்டில்ஸ்) மற்றும் ஸ்ரீதர் (டிசைனர்) ஆகியோர் தொழில் நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்ட காலமாகப் பணியாற்றிய இணை இயக்குநரான மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

DSC_0043

தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த ‘தண்ணி வண்டி’ என்ற தலைப்பு உடனடியாக நம்மை அதோடு பொருத்தி பார்க்க வைக்கிறது.

ஆனால், இயக்குநர் மாணிக்க வித்யா படம் பற்றிக் கூறும்போது, “இந்தப் பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர். அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே, கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம்.

அதே நேரத்தில் கதை நீர் நெருக்கடியை பற்றியதும் அல்ல. எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை.

DSC_0079

மாவட்ட வருவாய் அதிகாரி கேரக்டர் வலுவான முக்கியத்துவத்தை கொண்ட ஒரு கதாபாத்திரமாகும், குறிப்பாக சக்தி வாய்ந்த வசனங்களை உடையது. இந்த கதாபாத்திரம் பல முன்னணி கலைஞர்களால்கூட விரும்பப்பட்டது, இறுதியாக நாங்கள் அஸ்வதியை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்தோம். உண்மையில், அவர் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்" என்றார்.