full screen background image

இராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..!

இராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..!

இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் மொத்தம் 4638  கதாபாத்திரங்கள் உள்ளன. அதில்  ஒரு கதாபாத்திரத்தின்  பெயர்தான்  ‘தண்டகன்’.  தற்போது இந்தப்  பெயரில் ஒரு  தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. 

இந்தப் படத்தை  ராயல்  ஃபிலிம்  ஃபேக்டரி  நிறுவனத்தின் சார்பில்  தயாரிப்பாளர் வி.இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர் தயாரிக்கும்  முதல் படமாகும்.

இந்தப் படத்தில்  அபிஷேக்  கதாநாயகனாக  நடித்திருக்கிறார்.  மனோசித்ரா,  அஞ்சு கிருஷ்ணா என்ற  இரண்டு  கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

மேலும், ‘ராட்சசன்’ படத்தின் வில்லனான  ‘நான்’ சரவணன்,  எஸ்.பி.கஜராஜ், ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – தளபதி ரத்னம், இசை – ஷ்யாம் மோகன், படத் தொகுப்பு – வசந்த் நாகராஜ், சண்டை இயக்கம் – பில்லா ஜெகன், நடனம் – ஸ்ரீசெல்வி, மக்கள் தொடர்பு -சக்தி சரவணன். 

இந்தப் படத்திற்குக் கதை,  திரைக்கதை,  வசனம்  எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான கே.மகேந்திரன்.  இவருக்குச்  சொந்த  ஊர் திருப்பூர்.  தொழில்  துறையில் முத்திரை  பதித்த  இவரை  சினிமா துறை ஈர்க்கவே இந்தத் ‘தண்டகன்’  திரைப்படத்தின் மூலம் கலைத் துறையில் தடம்  பதிக்க  வந்துள்ளார்.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கு பாடல்களை  பாடலாசிரியர் மோகன்  ராஜன் எழுத,  ஒரு பாடலை இயக்குநர் மகேந்திரனே எழுதி இருக்கிறார்.

‘தண்டகனின்’ புதிரான  குணச்சித்திரம்  எப்படி  இருக்கும்..?  அதன்  மன  இயல்பு  எத்தகையது  என்பதை இந்தத் ‘தண்டகன்’ படத்தைப் பார்த்தால் உணர முடியும்.

‘தண்டகன்’ என்னும் தீய குணம் கொண்ட ஒருவனால் இந்தச் சமூகத்தில்  எத்தகைய மோசமான  சம்பவங்கள்  நடக்கிறது  என்னும்  மிக  சிக்கலான  கதையை  நேர்த்தியான திரைக்கதை மூலம்  விளக்குகிறது  இந்தத்  ‘தண்டகன்’  திரைப்படம். 

பார்ப்பவர்களுக்கு ஒரு  நிமிடம்கூட  சலிப்பு  ஏற்படாதவண்ணம்  மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Our Score