‘தமிழரசன்’ படத்தில் சங்கீதாவும் நடிக்கிறாராம்

‘தமிழரசன்’ படத்தில் சங்கீதாவும் நடிக்கிறாராம்

எஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்.’

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் கோபி, ராதாரவி சோனு சூட், யோகி பாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா,  ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,  சென்ட்ராயன், ‘கும்கி’ அஸ்வின்,  மேஜர் கவுதம்,  சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ் கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்வும் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – ‘இசைஞானி’ இளையராஜா, பாடல்கள்  -பழனிபாரதி, ஜெய்ராம், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அனல் அரசு, படத் தொகுப்பு – புவன் சந்திரசேகர், நடன இயக்கம் – பிருந்தா, சதீஷ், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன், தயாரிப்பு  – கெளசல்யா ராணி.

இதே படத்தில் மிக முக்கியமானதொரு வேடத்தில் நடிகை சங்கீதா நடிக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த ‘நெருப்புடா’ படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா, மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் தனது கேரக்டர் பற்றி சங்கீதா பேசும்போது, “எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன். இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும்விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது..” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Our Score