full screen background image

‘ரத்தம்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கின..!

‘ரத்தம்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கின..!

INFINITI FILM VENTURES தயாரிப்பில், இயக்குநர் C.S.அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம்’ படத்தின் டப்பிங் பணிகள் எளிமையான பூஜையுடன்,  இன்று துவங்கியது..!

இந்த ரத்தம்’ படத்தை தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் Infiniti Film Ventures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றனர்.

இந்த ‘ரத்தம்’ படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இசை – கண்ணன், ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், படத் தொகுப்பு – சுரேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – திலிப் சுப்பராயன் ஆகியோர் தொழில் நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர். தவிர, தெருக்குரல்’ அறிவு இந்தப் படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியும் உள்ளார்.

முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய, அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மாஸ் பொழுது போக்கு படமாக இந்த ‘ரத்தம்’ உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் முழு பணிகளும் கச்சிதமாக நடந்தேறி வருகிறது. Infiniti Film Ventures நிறுவனத்தின் திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில்தான், இப்படத்தின் இந்திய ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். வெளிநாட்டு படப்பிடிப்பை படக் குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் விஜய் ஆண்டனி இதே Infiniti Film Ventures தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகின்றார். அப்படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

Our Score