தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்தலை நடத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதனால் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களிடையே பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தலில் 4 அணிகள் மோத இருக்கின்றன என்று கடைசிக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் முதல் அணியாக பிரபல தயாரிப்பாளரான ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தலைமையில் ‘பாதுகாப்பு அணி’ என்கிற பெயரில் ஒரு அணி உருவாகியிருக்கிறது.
இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடுகிறார்.
2 செயலாளர்கள் பதவிக்கு தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பனும், ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரும் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.முரளிதரன் போட்டியிடுகிறார்.
2 துணைத் தலைவர்கள் பதவிக்கு தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனும், ஆர்.கே.சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
20 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு,
தயாரிப்பாளர் கே.ராஜன்
தயாரிப்பாளர் ராதாரவி
தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன்
தயாரிப்பாளர் ஹெச்.முரளி
தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ்
தயாரிப்பாளர் ஆர்.வி.உதயகுமார்
தயாரிப்பாளர் மனோஜ்குமார்
தயாரிப்பாளர் மனோபாலா
தயாரிப்பாளர் கே.நந்தகோபால்
தயாரிப்பாளர் கே.விஜயகுமார்
தயாரிப்பாளர் பஞ்சு சுப்பு
தயாரிப்பாளர் பாபு கணேஷ்
தயாரிப்பாளர் முருகராஜ்
தயாரிப்பாளர் வினோத்குமார்
தயாரிப்பாளர் ரங்கநாதன்
தயாரிப்பாளர் பஞ்ச் பரத்
தயாரிப்பாளர் மதுரை என்.செல்வம்
மேலும் 3 தயாரிப்பாளர்களும் இணைந்து போட்டியிடுகின்றனர்.
திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களை பாதுகாப்பாகத் தயாரிக்கவும், திரைப்படங்களை தயாரிக்காத தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழ உழைப்பதே எங்களது அணியின் நோக்கம் என்று இந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.