full screen background image

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ‘டெஸ்ட்’ திரைப்படம்..!

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ‘டெஸ்ட்’ திரைப்படம்..!

நம் வாழ்வின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. சில சோதனைகள் உங்கள் தைரியம், உங்கள் கனவுகள் மற்றும் உங்கள் தியாகங்களை சோதிக்கும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது.  

இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

எழுத்து, இயக்கம்: எஸ்.சஷிகாந்த், தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பு)

கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் இந்த ‘டெஸ்ட்’ படத்தின் கதைக் கரு.

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி  தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த ‘YNOT’ ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்  எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.

இது பற்றி இயக்குநர் சஷிகாந்த் பேசும்போது, “பல ஆண்டுகளாக ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களைத் தயாரித்துவிட்டு தற்போது ‘டெஸ்ட்’ படத்திற்காக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவும் தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியாகவும் உள்ளது.

இந்தத் திரைப்படம் பல உணர்வுகள், சூழ்நிலைகளின் முடிவு,  வாழ்க்கை எப்படி அனைவருக்கும் சில சோதனைகளைத் தருகிறது என்பதைத்தான் ‘டெஸ்ட்’ பேச இருக்கிறது. ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகிய மூவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருப்பது ஸ்பெஷலான விஷயம்.

இந்தக் கதையை சாத்தியமாக்கிய ‘YNOT’ ஸ்டுடியோஸ், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் எனது அணிக்கும் நன்றி. ஏப்ரல் 4 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ படம் ப்ரீமியர் ஆகிறது” என்றார்.

விளையாட்டில் ஒரு முடிவும் தருணமும் மறக்க முடியாதது.  ஒரு கணம், ஒரு தேர்வு – அதுதான் ஹீரோவாகவோ வில்லனாகவோ மாற்றும். இந்தத் திரைப்படம் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்ல, வாழ்க்கை உங்களை நோக்கி வீசும் சோதனைகளையும் பற்றியது.

 

Our Score