full screen background image

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தில் பரபரப்பான தேர்தல்..!

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தில் பரபரப்பான தேர்தல்..!

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் மார்ச் 14 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்தில் தேர்தல் நடப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால் அடுத்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் 2 முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன.

ஒரு அணிக்கு ‘நல்லோர் அணி 2.0’ என்றும் இன்னொரு அணிக்கு ‘உழைப்பவர்கள் அணி’ என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

‘நல்லோர் அணி 2.0’-வில் இயக்குநர் ‘மங்கை’ அரிராஜன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுக்கிறார். இதே அணியில் பொதுச் செயலாளர் அணிக்கு சுகி மூர்த்தியும், பொருளாளர் பதவிக்கு வி.பி.தமிழ் பாரதிராஜனும் போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.ஆனந்தபாரதி, எல்.ராஜா இருவரும் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு டி.ஜெயப்பாண்டியன், எஸ்.சிவநேசன் இருவரும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கே.நட்ராஜ், எல்.முத்துக்குமாரசாமி, கதிரவன், ஆதித்யா, ஏ.கண்ணன், எம்.முத்து, ஜி.சந்திரசேகர், கே.வீராசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

‘உழைப்பவர்கள் அணி’யின் சார்பில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரான இயக்குநர் தளபதி போட்டியிடுகிறார்.

செயலாளர் பதவிக்கு இயக்குநர் சி.ரங்கநாதன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு அருந்தவராஜா போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு அரவிந்தராஜ், அறந்தாங்கி சங்கர் இருவரும் போட்டியிடுகின்றனர்.

இணைச் செயலாளர்கள் பதவிக்கு கஸ்னபர் அலிகான், கண்ணன் (எ) ஆரோக்கியசாமி இருவரும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு லோகநாதன், பசும்பொன், ஸ்டான்லி, முத்துக்குமார், ரெங்கராஜன், மாயக் கண்ணன், விஜய் கங்காதரன், மாவண்ணா மாரிமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் மார்ச் 14-ம் தேதியன்று விருகம்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைக்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

Our Score