தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்கத்திற்கு நேற்றைக்கு நடந்து முடிந்த தேர்தலில் தலைவராக மங்கை அரிராஜனும், செயலாளராக ஆர்.அரவிந்த்ராஜூம், பொருளாளராக அறந்தாங்கி சங்கரும் வெற்றி பெற்றுள்ளனர்.
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அரிராஜன் 309 வாக்குகளும், எட்வர்ட் ராஜ் 272 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.வி.சோலைராஜா 258 வாக்குகளும், குட்டி பத்மினி 256 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
துணைச் செயலாளர்கள் பதவிக்குப் போட்டியிட்ட ஆதித்யா 296 வாக்குகளும், விக்ராந்த் 278 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில்
நக்கீரன் 306 வாக்குகள், அழகு லிங்கம் 306 வாக்குகள், காயத்ரி 298 வாக்குகள், கென்னடி 293 வாக்குகள், சோழன் என்ற அறிவழகன் 276 வாக்குகள், பெருமாள் நேர் 275 வாக்குகள், கோபி பீம்சிங் 270 வாக்குகள், சக்தி 261 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.









