படமே இன்னும் துவங்கவில்லை. அதற்குள் கதைத் திருட்டுப் புகார்..!

படமே இன்னும் துவங்கவில்லை. அதற்குள் கதைத் திருட்டுப் புகார்..!

தமிழ்த் திரையுலகில் கதைத் திருட்டு புகார்களுக்கு பஞ்சமில்லைதான். ஆனால் இ்ப்போதெல்லாம் பட வெளியீட்டுக்கு முன்பே என் கதை என்று புகார்கள் வர ஆரம்பித்துள்ளன.

தற்போது அதைவிட ஆச்சரியப்படுத்தும்விதத்தில் படத்தின் படப்பிடிப்பே துவங்காத நிலையில் அந்தப் படத்தின் கதை என்னுடையது என்னும் புகார் எழுந்துள்ளது.

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து இயக்கவிருக்கும் படத்தின் மீதுதான் இப்படியொரு கதை புகார் எழுந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் கதை ஷங்கருடையது அல்ல. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூதான்  கதை எழுதியுள்ளார். இது முழுக்க, முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படமாம்.

படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்காத நிலையில் இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று செல்லமுத்து என்ற உதவி இயக்குநர் புகார் தெரிவித்துள்ளார்.

இவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை இயக்குநர் செல்லமுத்து இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சங்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.

பதில் வந்த பின்புதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிக்கப்படும் என்று எழுத்தாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Our Score