சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தல் – தளபதி-தலைவர், சி.ரங்கநாதன்-செயலாளராக தேர்வு.

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தல் – தளபதி-தலைவர், சி.ரங்கநாதன்-செயலாளராக தேர்வு.

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தலில் இயக்குநர் தளபதி தலைவராகவும், இயக்குநர் சி.ரங்கநாதன் செயலாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2 வருடங்களுக்கு ஒரு முறை தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தில் தேர்தல் நடப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால் அடுத்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் 2 முக்கிய அணிகள் போட்டியிட்டன. ஒரு அணிக்கு ‘நல்லோர் அணி 2.0’ என்றும் இன்னொரு அணிக்கு ‘உழைப்பவர்கள் அணி’ என்றும் பெயர் சூட்டியிருந்தார்கள்.

‘நல்லோர் அணி 2.0’-வில் இயக்குநர் ‘மங்கை’ அரிராஜன் தலைவர் பதவிக்கும், பொதுச் செயலாளர் பதவிக்கு சுகி மூர்த்தியும், பொருளாளர் பதவிக்கு வி.பி.தமிழ் பாரதிராஜனும் போட்டியிட்டனனர்.

மேலும் இதே அணியின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.ஆனந்தபாரதி, எல்.ராஜா, இணைச் செயலாளர்கள் பதவிக்கு டி.ஜெயப்பாண்டியன், எஸ்.சிவநேசன் இருவரும் போட்டியிட்டனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கே.நட்ராஜ், எல்.முத்துக்குமாரசாமி, கதிரவன், ஆதித்யா, ஏ.கண்ணன், எம்.முத்து, ஜி.சந்திரசேகர், கே.வீராசாமி ஆகியோர் இந்த நல்லோர் அணியின் சார்பில் போட்டிட்டனர்.

‘உழைப்பவர்கள் அணி’யின் சார்பில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரான இயக்குநர் தளபதியும், செயலாளர் பதவிக்கு இயக்குநர் சி.ரங்கநாதனும், பொருளாளர் பதவிக்கு அருந்தவராஜாவும் போட்டியிட்டனர்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு அரவிந்தராஜ், அறந்தாங்கி சங்கர் இருவரும் போட்டியிட்டனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு கஸ்னபர் அலிகான், கண்ணன் (எ) ஆரோக்கியசாமி இருவரும் போட்டியிட்டனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு லோகநாதன், பசும்பொன், ஸ்டான்லி, முத்துக்குமார், ரெங்கராஜன், மாயக் கண்ணன், விஜய் கங்காதரன், மாவண்ணா மாரிமுத்து ஆகியோர் இந்த உழைப்பவர்கள் அணியின் சார்பில் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த மார்ச் 14 ஞாயிற்றுக்கிழமையன்று விருகம்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் பின்பு வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி தலைவராக இயக்குநர் தளபதி மீண்டும் தேர்ந்தெடு்க்கப்பட்டுள்ளார். செயலாளராக சி.ரங்கநாதனும் மீண்டும் தேர்வாகியுள்ளார். பொருளாளர் பதவிக்கு நல்லோர் அணியில் இருந்து போட்டியிட்ட தமிழ் பாரதிராஜான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக ஆர்.அரவிந்தராஜ், அறந்தாங்கி சங்கர் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இணைச் செயலாளர்களாக கஸ்னபர் அலிகான், கண்ணன் என்ற கே.எஸ்.ஆரோக்கியசாமி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நல்லோர் அணியில் இருந்து எம்.முத்து, ஏ.கண்ணன், ஆதித்யா என்ற என்.எஸ்.செல்வம், கே.நட்ராஜ் ஆகியோரும், உழைப்பவர்கள் அணியில் இருந்து எஸ்.கண்ணன் என்ற மாயக்கண்ணன், எம்.பசும்பொன், வி.லோகநாதன், சி.டி.முத்துக்குமார்,  ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Our Score