full screen background image

2011-2012-2013-ம் ஆண்டிற்கான தரமான திரைப்படங்களுக்கான அரசு மான்யம் – அறிவிப்பாணை வெளியானது.

2011-2012-2013-ம் ஆண்டிற்கான தரமான திரைப்படங்களுக்கான அரசு மான்யம் – அறிவிப்பாணை வெளியானது.

2011, 2012, 2013-ம் ஆண்டில் வெளியான தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியம் பெறுவதற்கான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் திரைப்படம் என்பது படத்தினை திரையிடுவதற்காக பிரதிகள் எடுக்கப்பட்டிருந்தால் ஒரு படத்திற்குக் குறைந்த்து 8 பிரதிகளிலிருந்து அதிகப்பட்சம் 25 பிரதிகள்வரை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் திரையிட்டிருந்தால் குறைந்த்து 8 திரையரங்குகளிலிருந்து அதிகப்பட்சம் 81 திரையரங்குகளில் திரையிடப்பட்ட படமாக இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

மத்திய தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு அந்தந்த ஆண்டுகளில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை திரையிடப்பட்ட 35 மி.மீ / சினிமாஸ்கோப் முழு நீளத் திரைப்படங்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படும்.

இந்த்த் திரைப்படங்கள் 3000 மீட்டர் நீளத்திற்குக் குறைவில்லாமலும், அல்லது 90 நிமிடங்களுக்குக் குறைவில்லாமலும் ஓடக் கூடிய அளவிலும் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

முந்தைய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டு மத்திய தணிக்கைக் குழுவிடம் சான்று பெற்ற திரைப்படங்கள் கீழ்க்கண்ட காலவரையறைக்குள் அந்தந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

2011-ம் ஆண்டிற்கு – ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2011 வரை

2012-ம் ஆண்டிற்கு – ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2012 வரை

2013-ம் ஆண்டிற்கு – ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2013 வரை

அரசு மானியம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி தகுதியுடைய படங்கள் மட்டுமே தரமான படங்களாக்க் கருதப்படும்.

இதற்கான விணணப்பப் படிவங்களை 10 ரூபாய் செலுத்தி இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களிடமிருந்து 30-04-2015 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 100 ரூபாயை பதிவுக் கட்டணமாக நாட்டுடமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை (The Director Information and Public Releations Department) என்ற பெயரில் எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலையை (Demand Draft) இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 20-05-2015 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

இயக்குநர்

செய்தி மக்கள் தொடர்புத் துறை

சென்னை – 600 009.

Our Score