தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு ஜூலை 14-ம் தேதி தேர்தல்..!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு ஜூலை 14-ம் தேதி தேர்தல்..!

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் தேர்தல் நடப்பது வாடிக்கை. அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தவிருப்பதாக அந்தச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தற்போது இச்சங்கத்தின் தலைவராக விக்ரமனும், செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக இயக்குநர் பேரரசுவும் பணியாற்றி வருகிறார்கள்.

புதிய தேர்தல் தேதியை அறிவிக்கும் பொருட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை வடபழனி கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தேர்தலை வரும் ஜூலை 14, ஞாயிற்றுக்கிழமையன்று நடத்த இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

tantis-office

மேலும், சங்கத்தின் புதிய தலைவராக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவை தற்போதைய செயலாளரும், பெப்சியின் தலைவருமான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி முன் மொழிந்து, வழி மொழிந்தார்.

TANTIS-Members-2

இதனை பொதுக் குழுவுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டதால் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

TANTIS-Members-3

மற்றைய பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 14-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இது குறித்து தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019-2020-ம் ஆண்டிற்கான தேர்தல் அறிவிப்பு :

தேர்தல் அதிகாரி :ச.செந்தில்நாதன், B.A, B.L.,

(வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்)

கைபேசி : 9444082180 / 9444453842

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூலை 14-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று 157, N.S.கிருஷ்ணன் சாலை, வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அரங்கத்தில் (கமலா திரையரங்கம் அருகில்) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

புதிய நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அமையும்.

தலைவர் – 1, துணைத் தலைவர்கள் – 2, பொதுச் செயலாளர் – 1, இணைச் செயலாளர்கள் – 4, பொருளாளர் – 1. மேலும் செயற்குழு உறுப்பினர்கள் – 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

1. வேட்பு மனு கட்டணம் – ரூ.100

2. வேட்பாளர் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை (Deposit)

அ) தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு வைப்புத் தொகை ரூபாய் 3,000. கூடுதலாக 10,000 ரூபாயை நன்கொடையாக சங்கத்திற்கு வழங்க வேண்டும்.

ஆ) துணைத் தலைவர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு வைப்புத் தொகை ரூபாய் 2,000. இவர்கள் கூடுதலாக 3,000 ரூபாயை நன்கொடையாக சங்கத்திற்கு வழங்க வேண்டும்.

இ) செயற்குழு உறுப்பினர் பதவிக்கு வைப்புத் தொகை ரூபாய் 1,000. இவர்கள் கூடுதலாக 2,000 ரூபாயை நன்கொடையாக சங்கத்திற்கு வழங்க வேண்டும்.

தேர்தலில் பதிவான வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கினை பெற்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.

வாக்காளர் பட்டியல்  வெளியீடு – ஜூன் 27.

வாக்காளர் பட்டியல் திருத்தம் – ஜூன் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெறும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு – ஜூலை 1.

தேர்தல் அட்டவணை :

அ) வேட்பு மனுக்கள் ஜூன் 26-ம் தேதி முதல் 28-ம் தேதிவரையிலும்  சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.

ஆ) பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஜூன் 26 முதல் ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணிவரையிலும் சங்க அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம்.

இ) வேட்புமனு பரிசீலனை மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு – ஜூன் 29.

ஈ) வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதல் – ஜூலை 1, 2.

உ) வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடு – ஜூலை 3.

ஊ) தேர்தல் நாள் ஜூலை 14. ஞாயிற்றுக்கிழமை – காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிவரையிலும்.

குறிப்பு ;

2018-ம் ஆண்டுக்கான சந்தாவை செலுத்தியவர்கள் மட்டுமே இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியும். சந்தா செலுத்தாதவர்கள் வாக்களிக்க முடியாது. 2018-ம் ஆண்டுக்கான சந்தாவைச் செலுத்த கடைசி தேதி 30-06-2019.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2018-ம் ஆண்டு சந்தாவோடு, 2019-ம் ஆண்டுக்கான சந்தாவையும் செலுத்தியிருக்கவேண்டும். சந்தா செலுத்த வேண்டிய கடைசி தேதி 30-06-2019 ஆகும். 2019-ம் ஆண்டுக்கான சந்தா பாக்கி வைத்திருப்பவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது.

தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் விதிமுறைகள் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.

தேர்தலை பொறுத்தவரையில் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது.

இப்படிக்கு

தேர்தல் அதிகாரி

விக்ரமன் (தலைவர்)

ஆர்.கே.செல்வமணி (பொதுச் செயலாளர்)

பேரரசு (பொருளாளர்)

Our Score