full screen background image

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் ‘அருவம்’ படத்தின் டீசர்

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் ‘அருவம்’ படத்தின் டீசர்

இன்றைக்கு வெளியான ‘அருவம்’ படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரித்திருக்கிறார்.

படத்தில் சித்தார்த் நாயகனாகவும், கேத்தரின் தெரசா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், சதீஷ், கபீர் துஹான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார், சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல் மற்றும் மயில்சாமி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – என்.கே.எகாம்பரம் (ஒளிப்பதிவு), படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ஜி.துரைராஜ், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, எழுத்து, இயக்கம் – சாய் சேகர்.

aruvam movie stills

திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது என்பதால் இந்த ‘அருவம்’ படத்தின் சிறப்பான டீசர் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தையும் ரசிகர்களிடையே உருவாக்கியிருக்கிறது.

படத்தின் இயக்குநரான சாய் சேகர் இது பற்றி கூறும்போது, “திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. ஆனால் ‘அருவம்’ இந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும்.

‘அருவம்’ என்பது ‘உடல்’ என்பதன் எதிர்ச்சொல். இந்த தலைப்பு படத்தின் மையக் கருத்து இயற்கைக்கு அப்பாற்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை கூறுகிறது.

_MG_2834

இது ஆக்‌ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு திகில் படம், கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறோம். இந்தப் படத்தின் பேசுபொருள் சமூகத்துடன் நேரடி தொடர்புடையது. இது பார்வையாளர்களிடையே நல்ல சிந்தனையை உருவாக்கும்.

சித்தார்த் மிகச் சிறந்த ஒரு நடிகர். அவரின் நுணுக்கமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கேதரின் தெரஸா சில கடினமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது, ஆரம்பத்தில் நான் அவருக்கு கடினமாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அவர் மிகச் சிறப்பாக நடித்து விட்டார்.

_MG_5549

படத்தின் டிரெயிலரைப் பார்த்துவிட்டு இது திகில் படமா.. பேய்ப் படமா என்ற தேடல் ரசிகர்களிடையே பரவலாக உள்ளது. ஆனால் இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைத்திருக்கிறோம்.. படத்தில் இருக்கும் எதைப் பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும் அபாயம் உள்ளது.  

படம் பார்க்கும்போது இது நிச்சயமாக திகில்-சஸ்பென்ஸ் படங்களிலேயே மிக வித்தியாசமாக இருக்கும் என்பதை உணர்வார்கள்..” என்றார்.

Our Score