சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படம் ஓடிடியில் வெளியாகிறது..!

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படம் ஓடிடியில் வெளியாகிறது..!

சந்தானத்தில் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிக்கிலோனா’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதியன்று ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவான ‘சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’ ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயாராகவுள்ளன. ஆனால், தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.

இதில் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் சந்தானம் இந்தப் படத்தில் மூன்றுவிதமான கெட்டப்களில் நடித்துள்ளார். சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

டைம் டிராவலை மையப்படுத்தியை நகைச்சுவை படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் நாயகனான சந்தானம் 2027ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதுதான் இந்த ‘டிக்கிலோனா’ படத்தின் கதையாம்.

இந்தப் படத்தைத் தயாரித்து முடித்து நீண்ட காலமான நிலையில் தற்போது, இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அடுத்த மாதம் 10-ம் தேதியன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இந்த ‘டிக்கிலோனா’ படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

Our Score