நிச்சயத்தார்த்தம் முடிந்த கையோடு தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாக அறிவித்த திரிஷா அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்.
இயக்குநர் திருவின் இயக்கத்தில், அவரது வருங்கால கணவர் வருண் மணியன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய்க்கு ஜோடியாக தானே நடிக்கப் போவதாக அவரே டிவிட்டரில் தெரிவித்து பல ஹீரோயின்களின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டார்.
“அப்போ எப்போதான் கல்யாணம்…?” என்று மீடியாக்கள் கேள்வி கேட்க.. “எப்போதும், யாருக்காகவும், எதற்காகவும் வாக்கு தவறக் கூடாது. அது நல்ல குணம் அல்ல..” என்று டிவிட்டரில் ‘யாருக்கோ’ பதில் சொல்லி பிரச்சினையை மேலும் பரவவிட்டார் திரிஷா.
சற்று காய்ந்து போயிருந்த இந்த விவகாரத்தில் வருண் மணியனுக்கு இப்போது நியாயமான தீர்வு கிடைத்திருப்பது போல தெரிகிறது.
இப்போது ஜெய்க்கு ஜோடியா திரிஷாவுக்கு பதிலாக டாப்ஸி நடிக்கவிருப்பதாகத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். இதே படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறாராம். அவரை வலைவீசி தேடி வருகிறார்களாம். இதனால் அதுவும் திரிஷாவுக்கு இல்லை என்பது உறுதியாகிறது.
ஸோ.. கண்ணாலம் சீக்கிரமாத்தான் இருக்கும் போல தெரியுது..!