இந்த வெப் சீரீஸில் கதையின் நாயகியாக ஓவியா நடித்துள்ளார். இவருடன் ராஜுவ், ஆஷிக், ஐரா, சிரா, ராம்குமார், T.R.S. மற்றும் லல்லு ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரிதுன், ஒளிப்பதிவு – சுராஜ், படத் தொகுப்பு – அருண், பத்திரிக்கை தொடர்பு – கே.எஸ்.கே.செல்வா.
இந்த வெப் சீரீஸ் பற்றி இயக்குநர் ரிதுன் பேசும்போது, “இது முழுக்க, முழுக்க மனித உறவுகளை மையமாக உருவாக்கப்பட்ட கதை. நாயகி ஓவியா இதில் ரேடியோ மிர்ச்சி எப்.எம்.சேனலில் ஆர்.ஜே.-வாக பணியாற்றுகிறார்.
இதில் Croses Talk எனும் நிகழ்ச்சியில் சமுதாயம் சார்ந்த கருத்துக்களை காமெடியாக சொல்லி இருப்பார். வளர்ப்பு தாயிடம் வளரும் ஓவியா மிக எதார்த்தமாக சாதாரண பெண்மணியாக வாழ்கிறார். ஆனால், அவரைச் சுற்றியிருக்கும் அனைவரும் அந்தஸ்துக்காகவும், பணத்திற்காகவுமே வாழ்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான வாழ்வியலை நல்ல உணர்வோடு காமெடியாக இப்படத்தில் சொல்லி இருக்கிறோம்…” என்றார்.