full screen background image

ஸ்வீட்டி நாட்டி கிரேசி – சினிமா விமர்சனம்

ஸ்வீட்டி நாட்டி கிரேசி – சினிமா விமர்சனம்

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் இந்துப் படத்தைத் தயாரித்துள்ளார்.

தெலுங்கில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் ‘தங்க மகன்’, ‘டெவில்’, ‘கடாவர்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான த்ரிகுண் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஸ்ரீஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘கோலிசோடா’, ‘கடுகு’, ‘சண்டி வீரன்’ போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் – K. குமார், பாடல்கள் – சினேகன், பாஸ்கர் S.தேவ், கலை இயக்கம் – ஜெயக்குமார், நடன இயக்கம் – ஐ.ராதிகா, தயாரிப்பு – கோவை ரமேஷ்,

பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜசேகர்.G இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதுவொரு மகா கேவலமான திரைப்படம். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைவிடவும் ஒரு மோசமான கதை ஆக்கம், திரைக்கதை வசனத்தில் உருவாகி இருக்கும் குப்பை.

படத்தின் கதை என்னவெனில்,

ஹீரோ முதலில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குடும்பத்தின் அக்காவுடன் உறவு கொள்கிறார். இதற்கடுத்து அதே குடும்பத்தில் இருக்கும் அம்மாவுடனும் உறவு கொள்கிறார்.

மூன்றாவதாக அந்தக் குடும்பத்தில் இருந்த இளைய மகளை திருமணம் செய்து அந்த வீட்டுக்குள் நுழைகிறார்.

ஏற்கனவே தன்னுடன் உறவு வைத்திருந்த ஹீரோ தன் வீட்டுக்குள்ளேயே மருமகனாக வந்த பின்பும் அம்மா, அதாவது மாமியார் தன் மருமகனை நினைத்து ஏங்குகிறாள். இன்னொரு பக்கம் அக்காவும், தன் தங்கையின் கணவரை நினைத்து ஏங்குகிறாள்.

இன்செஸ்ட்’ என்று சொல்லப்படும் உறவு முறையிலான காம கதைகளை புத்தகத்திலும், இணையத்திலும் படித்து இருப்பீர்கள். அதை அப்படியே நிஜமாக்கி கொண்டு வந்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.

இரட்டை அர்த்தமுள்ள ஆபாச வசனங்களை பல தமிழ் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு சில காட்சிகளில் கேட்டிருப்பீர்கள். ஆனால், இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்து கடைசிவரையிலும் பேசப்பட்ட அத்தனை வசனங்களுமே இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள்தான்.

ஆபாச வசனங்களினால் உண்டான காமெடியில் இந்தப் படம் சிறப்பான காமெடி திரைப்படமாக தவறான ஒரு கண்ணோட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

சென்சாரில் இந்தப் படத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. உண்மையில் சென்சார் தடை செய்யப்பட வேண்டிய திரைப்படம் இதுதான்!

திரைப்படங்களில் பொதுவாக ஆளும் கட்சியை தாக்கியிருந்தாலோ, அல்லது யாராவது ஒரு அரசியல் பிரமுகரை மறைமுகமாக சொல்லி இருந்தாலோ, அல்லது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இருந்தாலோ, “அந்தப் படத்தை வெளியிடக் கூடாது” என்று கட்டையை போடும் சென்சார் போர்டின் பெருமைமிக்க உறுப்பினர்கள்,

இந்தப் படத்தை பார்த்து எப்படி இதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை…!?

நாடு எப்படி சீரழிந்தாலும் பரவாயில்லை! அடுத்த தலைமுறை இளைஞர்களும், இளைஞிகளும் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை….

தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களிலேயே போர்னோ மூவியை காட்டினாலும் பரவாயில்லை..

ஆபாசக் கதைகளை சொன்னாலும் பரவாயில்லை…

ஆட்சியில் இருக்கும் எங்களை மட்டும் எதுவும் கேள்வி கேட்கக் கூடாது; கேட்டால் உன் படம் வெளி வராது என்கின்ற….

ஒரு உயர்ந்த கொள்கையை கையில் வைத்திருக்கும் இந்த மத்திய அரசையும், மத்திய அரசின் ஏவல் நாய்களையும், சென்சார் போர்டில் இருக்கும் அறிவு ஜீவிகளையும் மனதார வாழ்த்துகிறோம்!

இந்த நாடும், நாட்டு மக்களும், நாசமாக போகட்டும்!!!

Our Score