full screen background image

காமெடி படமாக உருவாகியுள்ள “ஸ்வீட்டி நாட்டி கிரேசி” பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது.

காமெடி படமாக உருவாகியுள்ள “ஸ்வீட்டி நாட்டி கிரேசி” பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி படம் “ஸ்வீட்டி நாட்டி கிரேசி” பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது.

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு ” Sweety Naughty Crazy ” ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” என்று இளமை ததும்பும் கலகலப்பான பெயரை வைத்துள்ளனர்.

பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜசேகர்.G இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தெலுங்கில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் ‘தங்க மகன்’, ‘டெவில்’, ‘கடாவர்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான த்ரிகுண் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஸ்ரீஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘கோலிசோடா’, ‘கடுகு’, ‘சண்டி வீரன்’ போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் – K. குமார், பாடல்கள் – சினேகன், பாஸ்கர் S.தேவ், கலை இயக்கம் – ஜெயக்குமார், நடன இயக்கம் – ஐ.ராதிகா, தயாரிப்பு – கோவை ரமேஷ்,

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஜி.ராஜசேகர் பேசும்போது, “மூன்று வெவ்வேறுவிதமான காதலை மையமாக வைத்து மூன்று கோணங்களில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாதான் இந்த படம். இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இருக்கும். படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்னை, ஹைதராபாத், கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

படம் பிப்ரவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம்” என்றார் இயக்குநர் ராஜசேகர்.G

Our Score