தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் மோகன் காந்திராமனும், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமனும் போட்டியிடுகின்றனர்.
செயலாளர் பதவிக்கு தற்போதைய செயலாளர் பிறைசூடனும், வி.சி.குகநாதனும் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு இயக்குநர் ரமேஷ்கண்ணா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2 துணைத் தலைவர்கள் பதவிக்கு பஞ்சு அருணாச்சலம், மங்கை அரிராஜன், யார் கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
4 இணை செயலாளர்கள் பதவிக்கு, இயக்குநர் சி.ரெங்கநாதன், ப.விஜய், டி.கே.சண்முகசுந்தரம், வி.பிரபாகர், எம்.கே.அருந்தவராஜா, எம்.ஏ.பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சாந்தகுமார், மாரிமுத்து, நிதின் சாம்சன், புதிவங்கம் முரளி, தேவராஜன், மயிலை எஸ்.குமார், பி.ஜெகன்மோகன், பால ரூபன், சின்னி ஜெயந்த், கே.வி.குணசேகரன், ராதாரவி, ஆர்.செல்வராஜ், காரைக்குடி நாராயணன், மதுரை தங்கம், மெளலி, மனோஜ் குமார், ஜி.அருணாச்சலம், திருமதி அஸ்வதி கைமால், எம்.பி.முகமது ஹிதாயதுல்லா, ஜே.எஃப்.சி.துரை, ஆர்.கே.செல்வமணி, பாலசேகரன், ஏ.வெங்கடேஷ், திருமதி ஹேமமாலினி, சினேகன் ஆகிய 26 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நாள் – 2016, ஜனவரி 24 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை.
இடம் : பாரதிதாசன் காலனி சமூக நலக் கூடம், கே.கே.நகர், சென்னை – 78.
வாக்குகள் அன்று மாலையே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்..!