பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில் நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது!
’கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ் பெற்ற கதாநாயகனான நிகில், தனது 20-வது படத்திற்காக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘சுயம்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.
எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி, தயாரிப்பு – புவன் மற்றும் ஸ்ரீகர், பேனர் – பிக்சல் ஸ்டுடியோஸ், வழங்குபவர் – தாகூர் மது, இசை – ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, வசனம் – வாசுதேவ் முனேப்பகரி, தயாரிப்பு வடிவமைப்பு – எம்.பிரபாகரன், இணை தயாரிப்பு – விஜய் காமிசெட்டி, ஜிடி ஆனந்த், மார்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ, பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
நிகிலை ஒரு மூர்க்கமான போர் வீரனாகக் காட்டிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கான புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போலவே, இந்த புதிய போஸ்டரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
’சுயம்பு’ என்ற தலைப்பும் செங்கோல் தாங்கிய படத்தின் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிகில் ஒரு போர் வீரனாக குதிரையில் சவாரி செய்யும்போது ஒரு நாகத்தை நோக்கி அம்பு எய்வதுபோல் இந்த போஸ்டரில் உள்ளது.
இப்படம் நடிகர் நிகிலின் கேரியரில் அதிக பொருட் செலவிலும் சிறந்த தொழில் நுட்பத் தரத்துடனும் உருவாக இருக்கிறது.
அவரது தோற்றம் முதல் காஸ்ட்யூம் என இதுவரை நாம் பார்த்திராத புதிய நிகிலை ரசிகர்கள் பார்க்க இருக்கின்றனர்.
படக் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், படத்தின் ரெகுலர் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது.









