full screen background image

விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இயக்குர் கே.எஸ்.ரவிகுமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு ‘ஹிட்லிஸ்ட்’.

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இத்திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, பால சரவணன், ரெட்டின் கிங்ஸ்லி, அபி நக்‌ஷத்ரா, KGF புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

C.சத்யா இசையமைக்கிறார். ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆப்ரகாம் படத் தொகுப்பு செய்கிறார். கலை இயக்கம் அருண். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் அசோசியேட் இயக்குநர்களான சூர்ய கதிர் காக்கள்ளர், K.கார்த்திகேயன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இந்தப் படத்தின் டீசரை பார்த்துவிட்டு “இது சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கும்..” என்று மகிழ்ந்து பாராட்டினார். தயாரிப்பாளர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கும், ‘ஹிட் லிஸ்ட்’ படக் குழுவினருக்கும் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

அறிமுக ஹீரோ விஜய் கனிஷ்காவை பெரிதும் பாராட்டி, “உங்கள் ஹிட் படங்களின் தொடக்கமாக, இந்த ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் இருக்கும்..” என்று வாழ்த்தினார்.

சிறந்த ஆக்சன், பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த, குடும்பத்தினருடன் பார்க்க கூடிய திரைப்படமாக இந்த ‘ஹிட் லிஸ்ட்’ படம் இருக்கும். தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score