கடந்த 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பாப்கார்ன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கியவர் நடிகை சம்யுக்தா மேனன்.
தமிழில் ‘களரி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம்தான் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில், நடிகை சம்யுக்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும் மது அருந்துவதில்லை, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும்போது கொஞ்சம் குடிப்பேன்” என்று சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் விருந்து, மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி கலந்து கொள்ளும்போது ஆல்கஹால்கூட அருந்துவதையும் நாகரீகமாக கருதுகிறார்கள்.
பொதுவாக நடிகைகள் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். ஆனால் சம்யுக்தா “நானும் மது அருந்துவேன்” என வெளிப்படையாக பேசியுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.









