full screen background image

ஆங்கில படங்களுக்கு நிகரான திரைக்கதையுடன் வரவிருக்கும் ‘சுற்றுலா’ திரைப்படம்

ஆங்கில படங்களுக்கு நிகரான திரைக்கதையுடன் வரவிருக்கும் ‘சுற்றுலா’ திரைப்படம்

ஜெம் எண்டர்டெயின்மெண்ட் மூவீஸ் J.ரமேஷ் வழங்க எம்.ஜெயகுமார் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படம் ‘சுற்றுலா’.

இதில் நடிகர் அஜீத்தின் மைத்துனரும், நடிகை ஷாலினியின் அண்ணனுமான நடிகர் ரிச்சர்ட், ஜானி என்ற வில்லத்தனமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். “ஏற்கெனவே பல படங்களில் நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லத்தனம் கலந்த கதாநாயகன் வேடம் இது என்பதாலும் புதுமையாக இருந்ததாலும் உடனே இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன்…” என்கிறார் ரிச்சர்ட்.

இந்தப் படத்தில் மிதுன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீஜி, அங்கிதா, சாண்ட்ரா ஆகிய மூவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் ஜெகன், சிங்கமுத்து, ஜாக், கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரவிசாமி

பாடல்கள் – சினேகன், விவேகா, அண்ணாமலை

இசை – பரணி

கலை – மோகன மகேந்திரன்

எடிட்டிங் – ஜி.சசிகுமார்

நடனம் – பாபி, அன்வர், சிவாஜி

ஸ்டண்ட் – கஜினி குபேரன்

தயாரிப்பு – வெங்கட்ராம், ரவிகுமார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ராஜேஷ் ஆல்பிரட் .

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….

“இது ஒரே நாளில் நடக்கும் கதை..! ஒரு மலைப் பிரதேசத்தில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை பரபரவென்று ஓடும் திரைக்கதை மூலம் படமாக்கி இருக்கிறோம். ஜானி என்ற கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் நெகடிவ் வேடம் ஏற்றிருக்கிறார்.. அவரது கலையுலக அங்கீகாரத்திற்கு அஸ்திவாரம் போடும் படமாக இந்த சுற்றுலா இருக்கும். இதை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே படமாக்கி இருக்கிறோம். படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான மாளிகைக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து படமாக்கினோம். அடுத்து என்ன…? அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்விதமாக ஆங்கிலப் படங்களுக்கு நிகரான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறேன்..” என்றார் இயக்குனர்.

Our Score