full screen background image

ஜெயம் ரவி என்கிற ரோமியோவுக்கு 2 ஜூலியட்டுகள்..!

ஜெயம் ரவி என்கிற ரோமியோவுக்கு 2 ஜூலியட்டுகள்..!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம்  ‘ரோமியோ ஜூலியட்.’  இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  ஹன்சிகா மோத்வானி  –  பூனம் பாஜ்வா  இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் வம்சி கிருஷ்ணா, கணேஷ் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

வசனம்    –  சந்துரு

பாடல்கள் – மதன் கார்க்கி, தாமரை

இசை –  D.இமான்

கலை  –  மிலன்

நடனம்   –  ஷெரீப்

ஸ்டண்ட்   –  திலீப் சுப்பராயன்

எடிட்டிங்    –   ஆண்டனி

தயாரிப்பு  நிர்வாகம்  –    ரமணா, A.K.கார்த்திக்

தயாரிப்பு மேற்பார்வை      –   K.K.ரவி

தயாரிப்பு  வடிவமைப்பு     –    A.K.சேகர்

தயாரிப்பு   –  எஸ். நந்தகோபால்

கதை, திரைக்கதை எழுதி இயகுகிறார் லக்ஷ்மன் .

இந்தப் படத்திற்காக  மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் பாடல் காட்சி  ஒன்று  படமாக்கப்பட்டது.

‘ரோமியோ  ரோமியோ  ஜூலியட் ரோமியோ’ என்ற பாடல் காட்சியில் ஜெயம் ரவி  – ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா மூவரும் பங்கேற்றனர். மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளுக்கு இமான் இசையமைத்த இந்த பாடல் காட்சி மிக பிரமாண்டமான முறையில் படமாகப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த பாடலை மும்பையின் பிரபல பாடகரான விஷால் தட்லாணி பாடி இருக்கிறார்.

அத்துடன் ‘அடியே அடியே  – என்  வாழ்க்கையை வீணாக்க பொறந்தவளே’  என்ற பாடல் காட்சியில் ஜெயம் ரவி – ஹன்சிகா பங்கேற்க சென்னை துறைமுகம், காசிமேடு மற்றும் விமான நிலையம் போன்ற இடங்களில் நடைபெற்றது.

மிக பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தை தயாரிக்கும் எஸ்.நந்தகோபால் படம் பற்றி பேசும்போது, “ஒரு ஜாலியான படமாக இந்த ரோமியோ ஜூலியட் உருவாகியுள்ளது. இந்தப் படம் தமிழ்ச் சினிமாவுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டப்பிங்கின்போது படத்தின் சில காட்சிகளை பார்த்தவர்களும் இப்போது பிரமிப்பாக பேசுகிறார்கள்…” என்றார்.

Our Score