full screen background image

அப்பாடா.. தலைப்பு வைச்சாச்சு.. ‘மாஸ்’..!

அப்பாடா.. தலைப்பு வைச்சாச்சு.. ‘மாஸ்’..!

‘அஞ்சானு’க்கு பின்பு சூர்யா நடிக்கவிருக்கும் வெங்கட்பிரபுவின் படத்திற்கு ‘மாஸ்’ என்று அழகுத் தமிழில்(!) பெயர் வைத்திருக்கிறார்கள்.(எப்படியும் இனிமேல் வரிவிலக்குக் கிடைக்கப் போறதில்லை.. அப்புறம் எதுக்குத் தமிழ் மொழியைப் பிடிச்சுத் தொங்கணும்ன்ற நல்லெண்ணம்தான்..!!!)

வழக்கம்போல கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கடந்த ஏப்ரல்-14-ம் தேதியே பூஜை போட்டாலும், படத்திற்கு டைட்டில் வைக்காமலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது சூர்யா அஞ்சானை முடித்துவிட்டு தயாராகிவிட்டதால், தலைப்பை வைத்துவிட்டு படப்பிடிப்புக்கு போக இவர்களும் தயாராகிவிட்டார்கள்..

“மாஸ்” என்கிற தலைப்பு எதற்கு என்று தெரியவில்லை. கதையோட ஒட்டுதோ, ஒட்டலையோ.. ஹீரோ, இயக்குநர் ரெண்டு பேரையும் வைச்சே படத்தை ஓட்டிரலாம்..

இந்தப் படத்தில் எமி ஜாக்சன், நயன்தாரா, பிரேம்ஜி மூவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யப் போகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறார்..! இந்தப் படத்தை எடிட்டிங் செய்யவிருக்கும் கே.எல்.பிரவீணுக்கு இது 50-வது படமாம்..!

‘பிரியாணி’க்கு பின்பு வரவிருக்கும் இது, அதைவிட செம மாஸாக இருக்க வேண்டும்.. இல்லாவிடில்..!

Our Score