இந்த வாரத்திய ஹாட்டஸ்ட் நியூஸே ஜோதிகா திரும்பவும் நடிக்க வருவதுதான்.. அவரது குடும்பத்தினர் இதனை எப்படி ஒத்துக் கொண்டார்கள் என்பது தெரியாமல் இருக்க.. சூர்யாவே ஜோ நடிக்க வந்த கதையை சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
“How old are you படத்தை நானும் ஜோதிகாவும் பார்த்தோம். ரொம்ப்ப் பிடிச்சிருந்தது. படத்தின் உரிமையை வாங்கி எங்களோட 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனர்லேயே படத்தைத் தயாரிக்கலாம்னு முடிவு செஞ்சோம்.
பெண்களை உயர்வா சித்திரிக்கிற மாதிரியான கேரக்டர் கிடைச்சா மீண்டும் நடிக்கிறேன்னு ஜோ ஒரு முறை என்கிட்ட சொல்லியிருந்தாங்க.. அது அப்போ ஞாபகத்துக்கு வந்த்து.. இந்தப் படத்தை பார்த்தப்ப மஞ்சுவாரியர் கேரக்டர் அவ்வளவு அழகா இருந்துச்சா..? ‘அந்த கேரக்டரில் நீயே நடிக்கலாமே?’ என்றேன். ரெண்டு நாள் யோசிச்சவர் ‘ஓகே’ என்றார்.
பெண்களுக்கான தன்னம்பிக்கை, துணிச்சல், தனியாக உழைச்சு முன்னேறலாம் என்று தைரியம்.. நியாயத்திற்காக எதையும் எதிர்த்து நின்று போராடும் குணம்ன்னு.. அற்புதமான கேரக்டர் இது.. அதனால சம்மதிச்சார் ஜோ. அதோட பசங்களும் வளர்ந்துட்டாங்க.. அவங்களே தன்னை கவனிச்சுக்கிற அளவுக்கு விவரம் தெரிஞ்சவங்களாகிட்டாங்க.. அதுனால டபுள் ஓகே..
‘ஜோ’ கண்டிப்பா தொடர்ந்து நடிப்பார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக.. அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருப்பதாக இருந்தால், அவருக்குப் பிடிச்சிருந்தா கண்டிப்பா நடிப்பார்..” என்றார் சூர்யா.
படத்தின் ஜோ-வின் கணவர் கேரக்டர்ல நடிக்கப் போறது சூர்யாதானே..?