full screen background image

தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்களுக்கு கண்டிஷன் போடும் ‘சுல்தான்’ படத் தயாரிப்பாளர்..!

தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்களுக்கு கண்டிஷன் போடும் ‘சுல்தான்’ படத் தயாரிப்பாளர்..!

நடிகர் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் திரைக்கு வர முடியாத நிலையில் இருந்தது. தற்போது வரும் ஏப்ரல் 2-ம் தேதி படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 2-ம் தேதி ‘சுல்தான்’ படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ‘சுல்தான்’ படம் ரிலீஸ் ஆவதால் ஏப்ரல் 2-ம் தேதிதான் சரியான  தேதியாக இருக்கும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி ஒரே மாதத்தில் ‘ஹாட் ஸ்டார்’ ஓடிடியிலும் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை குறைந்தது 45 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்கும் நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எடுத்திருக்கும் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் ‘சுல்தான்’ படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவே சொந்தமாக வெளியிடப் போவதாகவும், இதனால்தான் தைரியமாக திரைக்கு வந்த ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய அவர் முடிவெடுத்திருக்கிறார் என்று திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.

மேலும் இந்த டீலிங்கிற்கு ஒப்புக் கொள்ளும் சினிமா தியேட்டர்களுக்கு மட்டுமே தனது ‘சுல்தான்’ படத்தை அவர் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

எப்படியோ சுல்தான்’ திரைக்கு வந்தால் சரிதான்..!

Our Score