full screen background image

ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வாவுக்கு கேரள அரசின் விருது கிடைத்துள்ளது

ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வாவுக்கு கேரள அரசின் விருது கிடைத்துள்ளது

தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர், தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர்.

ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா.

இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை SIIMA விருது, எடிசன் விருது மற்றும் தமிழ் நாடு மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.

இந்த வரிசையில் ஸ்டண்ட் சில்வா தற்போது கேரளா மாநில அரசின் சிறந்த சண்டை இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான ‘எம்புரான் L2’ மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘துடரும்’ ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில அரசு கவுரவித்துள்ளது.

Our Score