வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் நடபெறப் போகும் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் நடிகர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் மோத உள்ளன. ஒவ்வொரு அணியிலும் தலா 6 நடிகர்கள் வீதம் 48 நடிகர்கள் விளையாடுகிறார்கள். இந்த போட்டி 6 ஓவர்களை கொண்டதாக இருக்கும். காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.
நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம்ரவி, ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் 8 அணிகளின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த 8 அணிகளின் தூதுவர்களாக நயன்தாரா, திரிஷா, சமந்தா, அமலாபால், ஹன்சிகா, காஜல் அகர்வால் ஸ்ரீதிவ்யா, வரலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 அணிகளுக்கும் ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘மதுரை காலேஜ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘கோவை கிங்ஸ்’, ‘சேலம் சீட்டாஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘ராமநாடு ரைனோஸ்’ என்று மாவட்டங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இதில் அனைத்து அணிகளுக்கும் தனித்தனியே ஸ்பான்ஸர்களையும் தேடிப் பிடித்திருக்கிறார்கள். இதன்படி சென்னை சிங்கம்ஸ் அணியை ராம்ராஜ் காட்டன் வேஷ்டி நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது. மதுரை காளைஸ் அணியை எஸ்தெல் நிறுவனமும், கோவை கிங்ஸ் அணியை சக்தி மசாலா நிறுவனமும், நெல்லை டிராகன்ஸ் அணியை எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழகமும், திருச்சி டைகர்ஸ் அணியை கல்யாண் ஜூவல்லர்ஸும் ஸ்பான்ஸர் செய்கின்றன.
அணி வீரர்களின் முழு பட்டியல் இதோ :
சென்னை சிங்கம்ஸ் – நடிகர்கள் : சூர்யா (கேப்டன்), விக்ராந்த், சிவா, உதய், நந்தா, அருண் விஜய், அர்ஜுன். நடிகைகள் : ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கௌரி முங்கல், திவ்யா, ருக்மணி.
மதுரை காளைஸ் – நடிகர்கள் : விஷால்(கேப்டன்), ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான். நடிகைகள் : வரலட்சுமி, ஜனனி ஐயர், நிகில் கல்ராணி, சாந்தினி, மதுமிதா.
கோவை கிங்ஸ் – நடிகர்கள் : கார்த்தி(கேப்டன்), பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே.ரித்திஷ், பிரசாந்த். நடிகைகள் : தமன்னா, மது ஷாலினி, சிருஷ்டி டாங்கே, மும்தாஸ் மிஸா, அபிநயஸ்ரீ.
நெல்லை ட்ராகன்ஸ் – நடிகர்கள் : ஜெயம் ரவி(கேப்டன்), அரவிந்த்சாமி, விஜய் வசந்த், சவுந்தர்ராஜா, பிருத்வி, அஸ்வின் சேகர், வைபவ். நடிகைகள் : ஸ்ரீதிவ்யா, நமீதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி நாயர்.
ராம்நாடு ரைனோஸ் – நடிகர்கள் : விஜய் சேதுபதி(கேப்டன்), ஜெய், கலையரசன், போஸ் வெங்கட், வருண் ஐசரி கணேஷ், சக்தி, அருண் பாலாஜி. நடிகைகள் : ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.
தஞ்சை வாரியர்ஸ் – நடிகர்கள் : ஜீவா (கேப்டன்), லஷ்மண், அசோக், ஷரண், பசுபதி, அதர்வா, பிளாக் பாண்டி. நடிகைகள் : அமலாபால், தன்ஷிகா, நிகிஷா பட்டேல், ஃப்ளோரா ஷைனி, சஞ்சனா சிங்.
திருச்சி டைகர்ஸ் – நடிகர்கள் : சிவகார்த்திகேயன் (கேப்டன்), ஷாம், விக்ரம் பிரபு, அசோக் செல்வன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன். நடிகைகள் : கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா.
சேலம் சீட்டாஸ் – நடிகர்கள் : ஆர்யா(கேப்டன்), கார்த்திக் முத்துராமன், ஆதவ், உதயநிதி, உதயா, ஜித்தன் ரமேஷ், செந்தில். நடிகைகள் : பிந்து மாதவி, நந்திதா, பூனம் கவுர், ரகசியா, சுஜா வரூணி.
மிர்ச்சி சிவா, குஷ்பூ இருவரும் இப்போட்டியை தொகுத்து வழங்குவார்கள். இந்தப் பட்டியலில் அஜீத், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.









