full screen background image

“தொலைக்காட்சி நல்லதுக்கா.. கெட்டதுக்கா…?” – ‘தொல்லைக்காட்சி’ படம் பதில் சொல்லுமாம்..! 

“தொலைக்காட்சி நல்லதுக்கா.. கெட்டதுக்கா…?” – ‘தொல்லைக்காட்சி’ படம் பதில் சொல்லுமாம்..! 

சமீபத்தில் வெளியான ‘ஜீரோ’ திரைப்படம் சினிமா விமர்சகர்களின் மத்தியில் பெரும் பாராட்டை பெற்ற நிலையில், நடிகர் அஷ்வினின் அடுத்த திரைப்படமான ‘தொல்லைக்காட்சி’  படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடியவுள்ளது.

Thollaikatchi - tamil movie poster 111

எந்தவித  பின்பலமும் இன்றி, தன் திறமையை மட்டும் வைத்து கொண்டு தமிழ் சினிமாவில்  காலடி எடுத்து வைத்த அஷ்வினுக்கு தற்போது வெற்றிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இவர் தனது  அடுத்த படமான ‘தொல்லைக்காட்சி’ பற்றி கூறுகையில், “தற்போது உள்ள காலகட்டத்தில் தொலைக்காட்சி எவ்வாறு ஒரு மனிதனின் குணத்தை மாற்றுகிறது; சிலருக்கு அது நல்லதாக இருக்கலாம், சிலருக்கோ மோசமான சூழ்நிலையையும் உருவாக்கலாம் என்பதே இந்த படத்தின் கதை கரு..! இந்தப் படத்தில் எனக்கு ஜோதிடத்தின் மேல் அதிக நம்பிக்கை கொண்டவனாக இருக்கும் ஒரு கதாப்பாத்திரம்..” என்கிறார் அம்சமான ஆறடி அழகனான  அஷ்வின்.

Thollaikatchi - tamil movie poster -new

மேலும், படத்தின் அறிமுக இயக்குரான சாதிக்கான், A.R. முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நடிகர் அஷ்வின் இந்தப் படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடித்துள்ளார்.. கிராமத்து பின்ணணியில் உருவாகும்  இந்த திரைப்படம், சிரிக்க, சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும்..” என்கிறார் இயக்குநர்.

Our Score