தமிழில் முதல்முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப்படம் ‘SSHHH.’
‘Lust Stories’ எனும் ஹிந்தி படத்தினை போன்று தமிழில் காமத்தினை பேசுபோருளாக கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது.
BIG PRINT PICTURES நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் இப்படத்தினை தயாரிப்பதோடு, படத்தின் நான்கு கதைகளில் ஒரு பகுதியினை இயக்குகிறார்.
மற்ற மூன்று கதைகளை பிருத்வி ஆதித்யா(‘க்ளாப்’ படத்தின் இயக்குநர்), வாலி மோகன்தாஸ்(அறிமுகம்), ஹரீஷ் G.Y.(அறிமுகம்) இயக்குகின்றனர்.
XLLENT PICTURE BOX LLP நிறுவனத்தின் சார்பில் விவேக் ரவிசந்திரன் மற்றும் DAINA PICTURES சார்பில் தயாரகிப்பாளர் சுரேஷ் நல்லுசாமி இருவரும் இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.
PENCIL TOWN TALKIES இப்படத்தின் லைன் புரடக்சன் செய்துள்ளனர்.
இப்படத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான ஶ்ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஷ்வர்யா தத்தா, க்ரிஷா க்ரூப் (‘கோலி சோடா-2’, ‘கிளாப்’ புகழ்), அறிமுக நடிகர் மாறன் மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. இந்த நிலையில் தற்போது ‘SSHHH’ படக் குழு தமிழ் சினிமா முன்னெப்போதும் கண்டிராத வகையில், மிக விரைவாக இந்தப் படத்தின் படப்பிடிப்பினை முடித்துள்ளனர்.
நான்கு வேறு வேறு வயது நிலைகளில், வேறு வேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் காம உணர்வுகளை பேசும், நான்கு அழகான கதைகளை உள்ளடக்கியது இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தின் இரண்டு பகுதிகளுக்காக, 1999-ம் ஆண்டு மற்றும், 2005-ம் ஆண்டு காலத்தை பிரதிபலிக்கும்வகையிலான வீடு மற்றும் இடம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. 2010 மற்றும் 2020-ம் ஆண்டிற்கான காலகட்டங்கள் நேரிடையான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது.
‘SSHHH’ படம், காமத்தை பகடி செய்யாமல், அதிலிருந்து மாறுபட்டு, இயற்கையான காமத்தின், உணர்பூர்வமான மறுபக்கத்தை, காட்டும் படைப்பாக இருக்கும் என்று படக் குழுவினர் சொல்கின்றனர்.
படத்தின் ட்ரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு, மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.