சத்யராஜ், சிபி சத்யராஜ், பிந்து மாதவி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரில்லர் படமான ஜாக்சன் துரை படத்தின் விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியிருக்கிறது.
SRI GREEN PRODUCTIONS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.S.SHARAVANAN அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘ஜாக்சன் துரை’.
இதில் சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.. இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ZACHERY-யும் நடித்திருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்குகிறார் தரணிதரன், ஒளிப்பதிவு – யுவராஜ், இசை – சித்தார்த் விபின், படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன் கலை – T.N. கபிலன், EXECUTIVE PRODUCER – அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், PRODUCTION CONTROLLER – M.பூமதி, LINE PRODUCER – செல்வா, PRODUCTION MANAGER – C.பாலமுருகன் PRO – நிகில் முருகன் மற்றும் இவர்களுடன் பல தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த ‘ஜாக்சன் துரை’ திகிலும், நகைசுவையும் கலந்த படமாக உருவாகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 -களில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில் தமிழின் முதல் PERIODICAL பேய் படம் என்கிற பெயரை இது பெற்றுள்ளது. மேலும் ஹாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘CONJURING’ படத்தின் ஒப்பனை தொழில் நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மிக வேகமாக உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியிருக்கிறது.
ஏற்கெனவே ‘அருந்ததி’, ‘காஞ்சனா’, பிசாசு, ‘டிமாண்ட்டி காலனி’ என்று பல பேய் சம்பந்தப்பட்ட படங்களை வாங்கி விநியோகம் செய்து வெற்றி பெற்றிருக்கும் இந்த நிறுவனம் இப்படத்தை வாங்கியிருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகில் பெரிதும் அதிகரித்துள்ளது.
வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!