தெலுங்குலகின் இளைய சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு நடிப்பில் தற்போது வெளியாக்க் காத்திருக்கும் ‘ஸ்ரீமந்துடு’ என்ற தெலுங்கு திரைப்படம் தற்போது தமிழில் ‘செல்வந்தன்’ என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிக்க.. மைத்ரி மூவி மேக்கர்ஸ், M .B.எண்டர்டைன்மென்ட்ஸ் (P) ltd நிறுவனம் இதனை வெளியிடுகிறது.
இதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். மற்றும் ஜெகபதி பாபு, சுகன்யா, ‘மாஸ்கோவின் காவேரி’ படத்தின் நாயகன் ராகுல் ரவீந்திரன், சனம் ஷெட்டி, நிகிதா அணில், சம்பத், சுப்புராஜ், ராஜேந்திர பிரசாத், சித்தாரா, துளசி, முகேஷ் ரிஷி, ‘பாண்டிய நாடு’ ஹரீஷ், சனா, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – மதி
இசை – தேவிஸ்ரீ பிரசாத்
பாடல்கள் – விவேகா, ஏக்நாத், அருண்பாரதி, மீனாட்சி சுந்தரம், கலாராஜன்
கலை – எ.எஸ்.பிரகாஷ்
நடனம் – ராஜுசுந்தரம், தினேஷ், பாஸ்கோ சீசர்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – கே.வேங்கடேஸ்ராவ்
இணை இயக்கம் – பி.வி.வி.சோமராஜ், துளசி அஞ்சன்.
இயக்கம் – கொரட்டாலா சிவா. (இவர் பிரபாஸ் – அனுஷ்கா, சத்யராஜ் நடித்து மிர்ச்சி என்ற தெலுங்கு படத்தை இயக்கியவர்.)
தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்.
இணைத் தயாரிப்பு – வெங்கட்ராவ்
மிக பிரமாண்டமான முறையில் சுமார் 70 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாக இருந்த நேரத்தில் ‘பாகுபலி’ படம் வெளியானதால் இந்த படத்தின் வெளியிட்டை மகேஷ்பாபுவே ஒத்திவைத்து வரும் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.
வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் A.R.K. ராஜராஜா. இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.
இவரிடம் படத்தை பற்றி கேட்டபோது, “மகேஷ்பாபு படம் என்றாலே ஆக்சனுக்கு பெயர் போனது. அது, இந்த படத்திலும் இருக்கும். பிரமாண்டமான ஐந்து சண்டை காட்சிகள், ஆறு பாடல் காட்சிகள் இடம் பெறுகின்றன.
இந்த படத்தில் நாயகன் மகேஷ்பாபு உபயோகப்படுத்தும் ஒரு சைக்கிள் 3.75 லட்சம் செலவில் வெளிநாட்டில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டது…” என்றார்.