ரசிகர்களை தனது சிலந்தி வலையால் பெரும் எதிர்பார்ப்பில் கட்டி போட்டிருக்கும் திரைப்படம் ‘ஸ்பைடர்’,
அதன் கதாநாயகனான ஸ்டைலிஷ் ஹீரோவான மகேஷ்பாபுவின் பிறந்த நாளான கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதியன்று ஸ்பைடர் படத்தில் இடம் பெற்ற ‘பூம் பூம்’ என்ற பாடலை வெளியிட்டது திரை உலக வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
A.R.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு, ராகுல் ப்ரீத்தி சிங், S.J.சூர்யா மற்றும் பரத் நடிப்பில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தினுடைய பிரம்மாண்டமான விழா வரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று நடக்கவுள்ளது. இது கதாநாயகனான ஸ்டைலிஷ் ஹீரோ மகேஷ்பாபுவை அதிகாரப்பூர்வமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் விழாவாகும்.
தமிழ் ரசிகர்களின் மனதில் என்றுமே வளர்ந்து கொண்டிருக்கும் மகேஷ் பாபு ‘ஸ்பைடர்’ படத்துக்காக தன் சொந்த குரலில் டப் செய்து முடித்துள்ளார். தனது முதல் தமிழ் படமான ‘ஸ்பைடர்’ படத்திற்கு மகேஷ்பாபு தன் சொந்த குரலில் பேசியிருக்கிறார் என்கிற செய்தி தமிழ்நாட்டிலுள்ள மகேஷ்பாபு ரசிகர்களையும், ‘ஸ்பைடர்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்க வைத்து இருக்கிறது.
“இந்த தொழில் பக்தியும், நேர்மையும்தான் மகேஷ்பாபு அவர்களை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவரது தமிழும், தமிழ் உச்சரிப்பும் அவ்வளவு சிறப்பாக உள்ளது. சென்னையில் அவர் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தது அவரது தமிழிற்கு மிகவும் உதவியுள்ளது. சென்னையுடனான நெருக்கம், அவரை இங்கும் வெற்றி பெற, பெரிய உந்துதலாக இருக்கின்றது…” என இப்படத்தின் தயாரிப்பாளரான ‘தாகூர் பிலிம்ஸ்’ மது கூறினார்.










