பிரபல கர்நாடக இசைப் பாடகி சவுமியா நடிகையானார்..!

பிரபல கர்நாடக இசைப் பாடகி சவுமியா நடிகையானார்..!

 பிரபல கர்நாடக இசைப் பாடகியான செளம்யா முதல்முறையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் சவுமியா.  பல்வேறு டிவிக்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். தமிழகத்தின் கர்நாடக இசை பாடகிகளில் டாப் லிஸ்ட்டில் இவரும் ஒன்று. இப்போது இவரும் கோடம்பாக்கத்தில் ஒரு நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.

சின்னத்திரை தொகுப்பாளரும், இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் ‘வானவில் வாழ்க்கை’ படத்தில் ஹீரோயின் ஜனனியின் அம்மாவாக நடித்திருக்கிறாராம் சவுமியா.

கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் நடன போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம். இதில் சவுமியாவுக்கு தன் மகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து அவளை பெரிய பாடகியாக்க விரும்பும் அம்மா கேரக்டராம்.!

ஜேம்ஸ் வசந்தன், சவுமியாவை நடிக்க அழைத்தபோது முதலில் நடிக்க மறுத்தவர் பின்பு கதையைக் கேட்டுவிட்டு தனது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இதில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக பல இசை நிகழ்ச்சிகளையும், வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்தாராம் சவுமியா. “தொடர்ந்து நடிப்பீர்களா..” என்று கேட்டபோது, “அது பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது..” என்கிறார் சவுமியா.

Our Score