full screen background image

நட்சத்திர கிரிக்கெட் அணி கேப்டனாக நடிகர் ஜீவா நியமனம்

நட்சத்திர கிரிக்கெட் அணி கேப்டனாக நடிகர் ஜீவா நியமனம்

‘செலிபெரட்டி கிரிக்கெட் லீக்’ என்ற ‘சிசிஎல்’ போட்டிக்கான தமிழ் நடிகர்கள் அணிக்கு நடிகர் ஜீவா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 8 மொழி நடிகர்கள் கொண்ட அணிகளை வைத்து வருடந்தோறும் சிசிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2015-ம் ஆண்டுக்கான போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

ccl-tamil-team

இந்தப் போட்டிக்கான தமிழ் நடிகர்கள் அணித் தலைவராக இதுவரையிலும் நடிகர் விஷால்தான் இருந்துவந்தார். ஆனால் இந்தாண்டு விஷால் நீக்கப்பட்டு நடிகர் ஜீவா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விஷால் இந்தாண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை என்றும் கூறப்படுகிறது. விஷால் இப்போது படங்களில் பிசியாக நடிப்பதாலும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

விஷாலுக்கு பதில் தமிழ் நடிகர்கள் அணியின் கேப்டன் பதவிக்கு ஜீவா, விஷ்ணு விஷால், விக்ராந்த் பெயர்கள் அடிபட்டன. ஆனாலும் நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் ஜீவாவே தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.

தமிழ் நடிகர்கள் அணியில் ஆர்யா, ஜித்தன் ரமேஷ், பரத், சாந்தனு, விஷ்ணு விஷால், விக்ராந்த், சிவா, ப்ரீத்வி, ஸ்ரீகாந்த், ஷாம், ரமணா, சஞ்சய், நிதின் சத்யா போன்றோரும் முன்னணி ஆட்டக்காரர்களாக உள்ளனர். இந்த முறை நடிகர் சிம்புவும் இந்த அணியில் இணைந்து ஆடப் போவதாக தகவல்

சிசிஎல் போட்டிக்கான தமிழ் அணியின் உரிமையாளரின் பின்னணியில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இருக்கிறார் என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்தான்..!

Our Score