கார்த்தி நடிக்கும் ‘தோழன்’, பிரான்ஸ் படத்தின் ரீமேக்காம்..!

கார்த்தி நடிக்கும் ‘தோழன்’, பிரான்ஸ் படத்தின் ரீமேக்காம்..!

நடிகர் கார்த்தி தான் இப்போது நடித்து வரும் ‘தோழன்’ படம் பற்றி இன்றைய ‘குமுதம்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் படம் ஒரு பிரான்ஸ் திரைப்படத்தின் ரீமேக் என்பதை பகிரங்கமா ஒத்துக் கொண்டுள்ளார்.

அவர் அளித்துள்ல பேட்டியில், “தோழன்’ ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட். இதை பண்றதா வேண்டாமா என்கிற யோசனையே என் மனசுக்குள்ள வரலை. அந்தளவுக்கு தரமான கதை.

‘The Untouchables’ன்ற பிரான்ஸ் படத்தைத்தான் நாங்க ரீமேக் பண்றோம்.  ஹாலிவுட் அளவுக்கு நம்ம சினிமாவில் கதையே இல்லையேன்னு கவலைப்படுறவங்களுக்கு இந்தக் கதை உணர்வுப்பூர்வமா சரியான திருப்தியைக் கொடுக்கும்.

படத்துல சண்டை காட்சிகளோ, பாடல் காட்சிகளோ இல்லை. சுத்தமான வாழ்க்கை பற்றின பதிவு. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிக்குமே தனித்தனியா ஷூட் பண்றேன். At a Timeல ஷூட்டிங் மாறி, மாறி போய்க்கிட்டிருக்கு..

தமன்னாவுக்கு இதுல பயங்கர ஸ்டைலிஷான கேரக்டர். நல்லா படிச்ச பொண்ணு. நான் படி்பபே இல்லாதவன். லோக்கல். என் இம்சைகளை அவங்க பாஸ் நாகார்ஜூனாவுக்காக எப்படி பொறுத்துக்குறாங்க..? அதை எப்படி சமாளிக்கிறாங்க..? எப்படி திண்டாடுறாங்கன்றதை காமெடியா கொண்டு போயிருக்கார் இயக்குநர் வம்சி..” என்கிறார் கார்த்தி.

Our Score