தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி..!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடிகர்  சங்கம் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

mgr statue - siaa members

பின்னர்  தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்பு நடந்த கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, “தமிழகமே இன்றைக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறது. எங்களுக்கு இந்த ஒரு சங்கத்தை உருவாக்கி அதற்கு ஒரு அடையாளம் கொடுத்து முகவரியும் கொடுத்து மிக பிரம்மாண்டமாக வழி அமைத்து கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அவருடைய பிறந்த நாளை இந்த வருடம் முழுவதும் நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அவரால் நாம் பெருமைப்படுவோம்…” என்றார்.

siaa members

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் பேசும்போது, “இன்று மக்கள் தலைவர் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி தமிழ்நாடு மட்டுமல்ல, ஊர் உலகமே அறியும்.

மக்களுக்காக பாடுபட்டு, மக்களுக்காக அவர் செய்த விஷயங்களை இன்றுவரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இன்று நடிகர் சங்கம் முன்னால் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். எம்.ஜி.ஆர் அவர்களைபோல் நாமும் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். முடிந்த அளவுக்கு நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்..” என்றார் நெகிழ்ச்சியோடு..!

Our Score