ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’ திரைப்படம்..!

ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’ திரைப்படம்..!

இப்போது வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ‘திரெளபதி’யை அடுத்து ‘சூர்ப்பனகை’ வரப் போகிறதாம்.

Apple Tree Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜசேகர் வர்மா இப்படத்தைத் தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கிறார். மரத்தை சுற்றி டூயட் பாடும் ஹீரோயினாக அல்லாமல் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா கேஸண்ட்ரா.

தெலுங்கில் அவர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்த ‘எவரு’ பெரும் வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களும் பெரும் நம்பிக்கை அளிக்கும் தரமான படங்களாக இருக்கின்றன. தமிழிலும் அவர் அடுத்தடுத்து எதிர்பார்ப்பு மிக படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா கேஸண்ட்ரா.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களிலும் தனக்கென தனிச் சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் ரெஜினா கேஸண்ட்ரா தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இந்த ‘சூர்ப்பனகை’ படத்தைக் கெட்டியாகப் பிடித்துவிட்டார்.

ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, இசை – சி.எஸ்.சாம், படத் தொகுப்பு – சாபு, கலை இயக்கம் – சீனு, சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், உடைகள் வடிவமைப்பு – ஜெயலட்சுமி, நடன இயக்கம் – சிவசங்கர், நிர்வாகத் தயாரிப்பு – கே.பி.பாலமுருகன், தயாரிப்பு நிர்வாகம் – டி.சுதாகர்,  உடைகள் – வாசு, புகைப்படங்கள் – அன்பு, சப்-டைட்டில்ஸ் – ரேக்ஸ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, இணை இயக்கம் – எல்.சந்திரசேகரன், திட்ட வடிவமைப்பு – கே.சதீஷ், விளம்பர வடிவமைப்பு – 24 ஏ.எம், இணை தயாரிப்பு – Anand Penumetcha, Prabha Chintlapati.

‘திருடன் போலிஸ்’ படத்தை இயக்கிய இயக்குநரான கார்த்திக் ராஜு இந்தப் படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இந்த ‘சூர்ப்பனகை’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜு  பேசும்போது, “படத்தின் தலைப்பு ‘சூர்ப்பனகை’ என்பதிலேயே இப்படம் கனமான கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டது என்பது விளங்கும்.

இந்த ‘சூர்ப்பனகை’ ஒரு வகையான சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படம். சாகசம், ஹியுமர், திரில்லர் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இப்படம்  இருக்கும். ரசிகர்களை புது வகை திரில் அனுபவத்திற்கு அழைத்து செல்வதாக இப்படம் இருக்கும்.

‘சூர்ப்பனகை’ எனும் பெயர் படத்தில் என்ன வகையான பாதிப்பை தரும், ரெஜினா கேஸண்ட்ராவின் கதாப்பாத்திரம் என்ன மாதிரி இருக்கும் என பெரும் ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியிருக்கும். அதுவும் ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள ரெஜினா கேஸண்ட்ராவின் தோற்றம் மேலும் பல கேள்விகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால், அவைகளனைத்தும் இப்போதைக்கு மர்மமே. இது குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது. ரசிகர்கள் அதனை திரையில் காணட்டும். அப்போது தான் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதில் மொத்த படக் குழுவிற்கும் பெரும் மகிழ்ச்சி…” என்றார்.

விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த ‘சூர்ப்பனகை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. குற்றாலம் முதலான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Our Score