ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ‘அரண்மனை-3’ துவங்கியது..!

ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ‘அரண்மனை-3’ துவங்கியது..!

இயக்குநர் சுந்தர்.சி.யின் அதிரி புதிரி ஹிட்டான ‘அரண்மனை’ சீரீஸில் அடுத்த பாகம் துவங்கிவிட்டது.

ஏற்கெனவே வெளிவந்த ‘அரண்மனை’, ‘அரண்மனை-2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்து இந்தத் தலைப்பை அசைக்க முடியாததாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பதிந்து வைத்துள்ளது.

இப்போது இந்த விதையை அறுவடை செய்ய அடுத்த பாகத்தை ’அரண்மனை-3’ என்ற பெயரில் இயக்குநர் சுந்தர்.சி. துவக்கியுள்ளார்.

இந்த மூன்றாவது பாகத்தையும் வழக்கம்போல அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகை குஷ்பூவும், இயக்குநர் சுந்தர்.சி.யும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

aranmanai-3-movie-stills-5

இந்தப் படத்தில் ஆர்யா, சுந்தர்.சி இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன், ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார், இசை – சத்யா, எழுத்து, இயக்கம் – சுந்தர்.சி.

aranmanai-3-movie-stills

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் என்ற இடத்தில் இருக்கும் ‘வான்கெனர் பேலஸ்’ எனப்படும் பிரம்மாண்டமான அரண்மனையில் துவங்கி நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

Our Score