ஜீவன், யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ ஐந்து மொழிகளில் தயாராகிறது.

ஜீவன், யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ ஐந்து மொழிகளில் தயாராகிறது.

‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘பாம்பாட்டம்’.

‘நான் அவன் இல்லை’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் ஜீவன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ‘டகால்டி’ படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

முக்கியமான இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். மற்றும் ஐந்து மொழிகளிலிருந்தும் 20-க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள்  நடிக்கிறார்கள். இவர்களுடன், இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

 ஒளிப்பதிவு – இனியன் J.ஹாரீஸ், இசை – அம்ரிஷ், பாடல்கள்  – பா.விஜய், யுகபாரதி, விவேகா, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை  இயக்கம் – C.பழனிவேல், சண்டை இயக்கம் – சூப்பர் சுப்பராயன், நடன இயக்கம் – தினேஷ், சிவசங்கர், மக்கள் தொடர்பு – மணவை புவன், இணை தயாரிப்பு  – பண்ணை A.இளங்கோவன். தயாரிப்பு  – V.பழனிவேல். எழுத்து, இயக்கம் – V.C.வடிவுடையான்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் V.C.வடிவுடையான் பேசும்போது, “இந்தப் படத்தில் 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கி உள்ளேன்.

மிகப் பெரிய C.G நிறுவனம் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிக பிரம்மாண்டமாக செய்து வருகிறார்கள். மிகப் பெரிய பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளோம்.

படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் மொத்தம் 120 நாட்கள் நடைபெற இருக்கிறது…” என்றார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பூஜை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் கதிரேஷன், இணைச்  செயலாளர் கொடப்பாடி ஜே.ராஜேஷ்,  மற்றும் செயற்குழு உறுபினர்களான அழகன் தமிழ்மணி, சக்தி சிதம்பரம், விஜயமுரளி, பாபு கணேஷ், சௌந்தர், நடிகர் உதயா  மற்றும் இயக்குநர்கள் திருமலை, மோகன், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Our Score