full screen background image

இயக்குநர் கே.பாக்யராஜ் துவக்கி வைத்த ‘சூரகன்’ திரைப்படம்

இயக்குநர் கே.பாக்யராஜ் துவக்கி வைத்த ‘சூரகன்’ திரைப்படம்

3rd Eye Cine Creations நிறுவனத்தின் சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமான செலவில் தயாரித்து, தானே கதாநாயகனாக நடிக்கும் படம் சூரகன்.’

க்ரைம் திரில்லராக உருவாகும் இந்த சூரகன்’ படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க, கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்கிறார்கள். மேலும், ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G.வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – 3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன், எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு இயக்கம் – சதீஷ் G.குமார், ஒளிப்பதிவு – ஜேசன் வில்லயம்ஸ், இசை – அச்சு ராஜாமணி, சண்டை பயிற்சி இயக்கம் – டேஞ்சர்’ மணி, நடனப் பயிற்சி இயக்கம் – ்ரீதர், ஒப்பனை – பிரின்ஸ் பிரேம், உடைகள் வடிவமைப்பு – கீர்த்தி வாசன், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தை இயக்கிய இயக்குநரான சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவையும் இவரே செய்கிறார்.

இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் கே.பாக்யராஜ் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

Our Score