full screen background image

“ரொம்ப டேமேஜ் பண்ணிராதீங்க”-சந்தானத்திடம் கெஞ்சிய தேவயானி..!

“ரொம்ப டேமேஜ் பண்ணிராதீங்க”-சந்தானத்திடம் கெஞ்சிய தேவயானி..!

‘பவர் ஸ்டார்’ மாதிரி ‘சோலார் ஸ்டார்’ ஒருத்தரும் போன வருஷம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானாரு. அவர் தேவயானியின் இல்லத்தரசர் இயக்குநர் ராஜகுமாரன். 4 இன்ச் அளவுக்கு லிப்ஸ்டிக்கை பூசிக்கிட்டு ‘திருமதி தமிழ்’ படத்துல ராமராஜனுக்கே சவால் விட்டவர்..

இப்படிப்பட்ட அழகு ராஜகுமாரனை நடிக்கவிடாமல் யார் தடுத்தது..? வேற யாரு..? அவர் வீட்டம்மாவேதான்.. “ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணுன்னு கோடில செலவு பண்ணி படத்தையெடுத்து.. அதுக்கு இன்னொரு கோடில செலவு பண்ணி தமிழ்நாடு முழுக்க சொந்தமா ரிலீஸ் செஞ்சு, 100 நாளுக்கும் டிக்கெட்டை சொந்த செலவுல வாங்கிக் கொடுத்து.. என் சொத்தை அழிச்சது போதும். கம்முன்னு உக்காருங்க போதும்..” என்று வீட்டம்மண்ணியின் உருமலுக்குப் பயந்து இத்தனை நாட்கள் அமைதியாகவே இருந்தார் ராஜகுமாரன்.

விதி விடலை.. ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ படத்துல தனக்கு ஜோடியா காமெடி செய்ய ஒரு புதுமுகத்தைத் தேடின சந்தானத்தின் கண்ணுல இந்த ‘சோலார் ஸ்டார்’ சிக்கிட்டாரு. உடனே ‘சோலார் ஸ்டாரை அள்ளிப் போட்டு தூக்கிட்டு வாங்கடா’ன்னு ஆட்களை அனுப்பிட்டாராம்..

‘சோலார் ஸ்டார்’ வரும்போதே நாலு செட் துணிமணிகளையும் கொண்டு வந்து ஷூட்டிங் ஸ்பாட்லேயே செட்டிலாயிட்டதால.. அவரோட வீட்டம்மா போன் செஞ்சு “எங்க இருக்கீங்க?”ன்னு கேட்டிருக்காங்க. “இங்கதான்.. நம்ம சந்தானம் கூப்பிட்டிருக்காரு நடிக்கிறதுக்கு.. அதான் வந்திருக்கேன்” என்றாராம் ராஜகுமாரன். “ஐயையோ.. அவர்கூட ஏன் போனீங்க.. அவர் ஆர்யா மாதிரி கெடுத்திருவாரு..” என்று புலம்பியிருக்கிறார் தேவயானி.

பின்பு சந்தானமே போனில் தேவயானிடம் பேச.. “என் வூட்டுக்காரரை ரொம்ப டேமேஜ் பண்ற மாதிரி ஏதும் சீன் வைச்சிராதீங்க…” என்று கணவருக்காக கேட்டுக் கொண்டாராம். அதுபோலவே படத்தில் ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரனை கலாய்க்கும் சீனில் கொஞ்சம் அடக்கமாக பேசியிருக்கிறாராம் சந்தானம்.

சரி.. அதான் இப்போ ‘சோலார் ஸ்டார்’ வீட்ல வெட்டியாத்தான இருக்காரு. ஏன் இந்த இசை நிகழ்ச்சிக்கு வரலை..? இவர் மட்டுமா வரலை.. சந்தானத்தை வளர்த்துவிட்ட சிம்புவே வரலை.. ஏன் வரலை..? சிம்புவுக்கு அழைப்பே போகலை.. ஏன் அழைப்பு போகலை..? எதுக்குங்க கூப்பிடணும்..? அதான் நம்ம வீட்டுப் புள்ள சந்தானமே தனி ஹீரோவாயிட்டாருல்ல.. இனிமே எதுக்கு மத்த ஹீரோக்கள் தயவெல்லாம்..? என்ன நாம சொல்றது சரிதானே மிஸ்டர் சந்தானம்..?

Our Score