‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டி’ உட்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் மறைந்த இயக்குனர் ராசுமதுரவன்.
அவர் கடைசியாக இயக்கிய படம் ‘சொகுசு பேருந்து.’ இந்தப் படத்தில் ஜானி, யுவன், கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, லியாஸ்ரீ, லீமா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் ராசு மதுரவன் மறைந்து விட்டார்.
சமீபத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் படத்திற்கு எந்தக் காட்சிக்கும் ‘கட்’ சொல்லாமல் ‘U’ சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர்.
இந்த படத்தை வெளியிட்டு இயக்குநர் ராசுமதுரவன் குடும்பத்தாருக்கு உதவிகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Our Score