நடிகர் சிவகார்த்திகேயனின் 20-வது திரைப்படத்தில், உக்ரேன் நாட்டை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கிறார்..!
இந்தப் படத்தைத் தயாரிப்பாளர்கள் நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு, மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அருண் விஷ்வா இப்படத்தில் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே ஆவலை குவித்த நிலையில், அடுத்த அதிரடியாக படத்தின் நாயகி குறித்து அற்புதமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரேன் நாட்டு நடிகையான மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்திற்கு அவரது பங்களிப்பு மிகப்பெரும் பலமாக அமையும் என ஒட்டு மொத்த படக் குழுவினரும் நம்புகிறார்கள். சர்வதேசத் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை குவித்தவர் அவர்.
இப்படத்திற்காக பல கலைஞர்களை பரிசீலித்த பிறகு, தயாரிப்பாளர்கள் மரியா ரியாபோஷப்கா படத்தின் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதி அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் ஏற்கனவே பங்கு கொண்டு நடித்து வருகிறார்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரையுலகில் இணையும் இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைப்பது மிகப் பெரிய சிறப்பம்சமாகும். தமன் தொடர்ந்து சார்ட் பஸ்டர் ஆல்பங்களை வழங்கி வருவதால், சிவகார்த்திகேயனுடன் அவரது கூட்டணி ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும்.
இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’ படத்தின் மூலமாகப் மூலம் புகழ் பெற்ற இயக்குநரான அனுதீப் K.V. இயக்குகிறார்,
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது.
இந்தப் படத்தின் முக்கிய பகுதிகள் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியின் கவர்ச்சிகரமான இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.










