full screen background image

இயக்குநர் வசந்த் தயாரித்து இயக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

இயக்குநர் வசந்த் தயாரித்து இயக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

‘கேளடி கண்மணி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’, ‘சத்தம் போடாதே’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குநர் வசந்த் S.சாய்.

இவர் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு தற்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – வசந்த் S.சாய், தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீசித்ரா டாக்கீஸ், கதை – அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன், ஒளிப்பதிவு – ‘Wide Angle’ ரவிஷங்கர், N.K.ஏகாம்பரம், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர் – மகி, மார்ஷல், ஆடியோகிராபி – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு – நிகில்.

இத்திரைப்படம் தற்போது ‘JIO MAMI MUMBAI FILM FESTIVAL-2018’ என்னும் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் கபீர் மெஹ்தா இயக்கிய ‘புத்தா மூவ்’, தனுஜ் சந்திரா இயக்கிய ‘எ மாண்சூன் டேட்’, அதுல் மோங்கியா இயக்கிய ‘அவேக்’, நாகராஜ் மஞ்சுளே இயக்கிய ‘அன் எஸ்ஸே ஆப் தி ரெயின்’, புத்தாடேப் தாஸ் குப்தா இயக்கிய ‘தி ப்லைட்’, ஷாசியா இக்பால் இயக்கிய ‘பிபாக்’ ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளது.

Our Score