full screen background image

அமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..!

அமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்பட விழாவிலும், நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குநர் வஸந்த் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து  மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பின்னணி இசையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்வீடனில் வருடந்தோறும் நடைபெறும் கோட்பெர்க் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொண்டது. அதேபோல் புனேவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும், கேரளாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசினைப் பெற்றிருக்கிறது.

கடந்தாண்டு பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருதினைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Our Score