‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா!

‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா!

மாடலிங் உலகில் புகழ் பெற்று விளங்கும் மாடல் நடிகையான பிரதைனி சர்வா, 'போதை ஏறி புத்தி மாறி' என்கிற தமிழ்ப் படத்தின் மூலம் நடிகையாக தனது பயணத்தை துவக்குகிறார்.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஏற்கனவே குறும்படங்களில் நடித்து பல பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் தீரஜ், இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கே.பி. இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும், சாபு ஜோசப் படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். எழுதி, இயக்குகிறார் அறிமுக இயக்குநரான கே.ஆர்.சந்துரு.

இந்தப் படத்தில் தனித்துவமான கதை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் கே.ஆர். சந்துரு.

இந்தப் படம் குறித்து நாயகி பிரதைனி சர்வா கூறும்போது, "திரைப்படங்களில் சில பெண் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை ஊக்குவித்து,  உற்சாகப்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

pirathani sharva

திரைப்படங்களில் நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகள் அல்லது கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது என்பதை நான் நம்புகிறேன்.

இயக்குநர் சந்துரு எனக்கு இந்தப் படத்தின் கதையையும், என் கதாபாத்திரத்தையும் விளக்கியபோது, என் கதாபாத்திரமான பிருந்தாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

என் கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாக இருந்தது. இயக்குநர் சந்துருவை பாராட்டும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை, ஆனால் அவர் உண்மையில் திறமை வாய்ந்த இயக்குனர், அவரது திறமையை திரையுலகம் கண்டிப்பாக புகழும்..." என்றார்.

இந்த ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம் திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படம். ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் உண்டு.